காதுக்குள் ஏதோ ஒரு உணர்வு! ஹெட்போனை கழட்டி பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! வைரலாகும் வீடியோ.spider-in-headphones-viral-video

நபர் ஒருவர் கெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தபோது அவரது காதுக்குள் திடீரென கூசுவது போன்ற ஒரு உணர்வு வந்ததை அடுத்து அந்த கெட்செட்டை கழட்டி பார்த்தபோது உள்ளே சிலந்தி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பெர்த்தில் வசித்துவருப்பவர் ஆலி ஹர்ஸ்ட். பிளம்பர் வேலை பார்த்து வரும் இவர், வழக்கம்போல் தனது கெட்செட்டில் பாடுகேட்டுக்கொண்டே வேலை பார்த்துள்ளார். அப்போது அவரது காதுக்குள் ஏதோ கூசுவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் தொடர்ந்து வேலை பார்க்க முடியவில்லை.

viral video

உடனே அவர் தனது காதில் மாட்டியிருந்த கெட்செட்டை கழட்டி அதனை சோதனை செய்தபோது அதனுள் பெரிய சிலந்தி ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அந்த கெட்செட்டை கீழேவைத்து அதை தட்டி அந்த பூச்சியை வெளியே எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை.

இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட அந்த காட்சி தற்போது வைரலாகவிருக்கிறது. வீடியோவை பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவருகின்றனர்.