லைப் ஸ்டைல்

பின்னி பிணைந்து ஆடிய பாம்புகள்..! ஒன்றும் புரியாமல் குழம்பிப்போன கீரிப்பிள்ளை.! வைரல் வீடியோ.!

Summary:

Snake dance mongoose confused video goes viral

பொதுவாக பாம்பிற்கு கீரிப்பிள்ளைக்கும் ஆகாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. இந்நிலையில், இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஓன்று இணைந்து ஆடியதைப் பார்த்து கீரிப்பிள்ளை ஒன்று குழம்பிபோய் அங்கும் இங்கும் திரியும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா என்பவர் வெளியிட்டுள்ள அந்த 24 வினாடிகள் ஓட கூடிய அந்த வீடியோவில், இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஓன்று இணைந்து ஆண்டிக்கொண்டிருப்பதை சிலர் வீடியோ எடுக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த கீரிப்பிள்ளை ஓன்று பாம்புகளை நெருங்கி செல்கிறது. ஆனால், பாம்புகள் கயிறு போல் பின்னி பிணைந்திருப்பதை பார்த்ததும் குழம்பிப்போய் பின்வாங்கிச் சென்று விடுகிறது. தங்கள் எதிரி தம்மை தாக்க வருவதுகூட தெரியாமல் பாம்புகள் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement