வைரல் வீடியோ: 16 அடி நீள கொடிய விஷ பாம்பு..! அசால்டாக டீல் செய்யும் சிறுமி..! பரபரப்பு வீடியோ காட்சி.!

வைரல் வீடியோ: 16 அடி நீள கொடிய விஷ பாம்பு..! அசால்டாக டீல் செய்யும் சிறுமி..! பரபரப்பு வீடியோ காட்சி.!


Small girl playing with 16 feet python viral video

சிறுமி ஒருவர் மிகப்பெரிய பாம்பு ஒன்றுடன் விளையாடும் வீடியோ காட்சிகள் பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது.

பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். எப்பேர்ப்பட்ட வீரனும் பாம்பு என்றால் ஒரு நிமிடம் சற்று பயப்படத்தான் செய்வார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற அச்சமும்தான் காரணம்.

பாம்பை பார்த்தால், அட அவ்வளவு ஏன்? பாம்பு என்று சொன்னாலே பயப்படும் பலர் இந்த உலகில் இருக்கும்போது, அதே பாம்பை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் சிலரும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கு உதாரணம்தான் இந்த வீடியோ காட்சி.

viral video

வீடியோவில் வரும் சிறுமி தனது இரண்டு வயதில் இருந்து பாம்பு ஒன்றுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். சிறுமிக்கு 2 வயது இருக்கும்போது அவரது கையில் மிகவும் சிறியதாக கொடுக்கப்பட்ட அந்த பாம்பு தற்போது 16 அடிக்கும் பெரிதாக வளர்ந்து பார்ப்போரை அச்சமடையவைக்கிறது.

ஆனால் அந்த சிறுமியோ, எந்த வித பயமும் இல்லாமல் அந்த பாம்பை கட்டிப்பிடித்து தூங்குவது, தோளில் தூக்கிப்போட்டு விளையாடுவது, மடியில் படுக்கவைத்து கொஞ்சுவது என ஒரு குழந்தையுடன் நடந்துகொள்வதுபோல் செயல்படுகிறார். நீங்களே அந்த காட்சிகளை பாருங்கள்.