தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு ஆபத்தா?.. எலுமிச்சை சாறு பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு ஆபத்தா?.. எலுமிச்சை சாறு பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!


side effects of drinking lemon juice

தினமும் எலுமிச்சை சாறு பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

உடல் எடையை குறைப்பதில் எலுமிச்சைசாறு முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உணவை நல்லது என்று கூறினால் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. எலுமிச்சை சாறு அதிகமாக ருசிப்பது உடலுக்கு நன்மை பயக்காது. எலுமிச்சை நீரை அதிகமாக பரவுவதால் பக்க விளைவுகள் ஏற்படும்.

ஏனெனில் எலுமிச்சை அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் வகையைச் சேர்ந்ததாகும். ஒரு நபர் அதிகமாக எலுமிச்சை பழம் உட்கொள்வதன் மூலம் அமிலத்தன்மை காரணமாக பற்சிதைவு ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு எலுமிச்சை ஜூஸ் உட்கொண்ட பிறகு பல் துலக்கும் வழக்கத்தையோ அல்லது வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். இப்படி செய்வதன் மூலம் பற்களை பராமரிக்க இயலும்

நோய் கிருமிகள் :

எலுமிச்சையின் தோல் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய நோய்கிருமிகள் இருக்கின்றன. பொதுவாகவே உணவகங்களில் எலுமிச்சை பானங்களுடன் எலுமிச்சை துண்டுகளும் பரிமாறப்படுகின்றன. எலுமிச்சையின் தோலில் ஆபத்தான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ள நிலையில், எலுமிச்சை பழத்தை சாறை பிழிந்து சாப்பிடுவது மட்டுமே நல்லது. 

தினமும் எலுமிச்சைசாறு பருகுவதில் தவறில்லை. எத்தனை பழங்கள் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். தினமும் இரண்டு பழங்கள் பயன்படுத்தலாம். அது போல ஒன்று அல்லது இரண்டு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் மட்டும் உட்கொண்டால் உடலுக்கு நல்லது.

வயிற்று உபாதை :

எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்வதால் இரப்பை குடல் பிரச்சனை, நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல், வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால் இரப்பை உணவுகுழாய் ரிப்ளக்ஸ் நோய் ஏற்படும்.

வாய்ப்புண் :

எலுமிச்சை பழங்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் வாய்ப்புண்கள் ஏற்படும். எனவே வாய்ப்புண், கொப்புளம், புண்கள் மற்றும் வெடிப்பு இருந்தால் அது ஆறும் வரை எலுமிச்சை சாறு பருகாமல் இருப்பது நல்லது.