எங்கு பார்த்தாலும் ஒரே மாரடைப்பு: இதயத்தின் திடீர் பாதிப்பிற்கு என்ன காரணம் தெரியுமா?
நாகரீக வளரச்சி என்றபெயரில் மனிதனின் உணவு பழக்கவழக்கம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. பல நேரங்களில் மோசமான உணவு பழக்கவழக்கத்தால் பல மோசமான நோய்கள் நம்மை வந்து சேர்க்கிறது.
குறிப்பாக இன்று பலரையும் அச்சுறுத்தும் நோயாக மாறிவருகிறது இதயம் சம்மந்தமான நோய்கள். எங்கு பார்த்தாலும் மாரடைப்பு, இதயம் சம்மந்தமான நோய்கள் என சிறுவயதில்லையே உயிரிழப்புகளும் ஏற்பட்டு நம்மை அச்சுறுத்துகிறது. இந்த இதய நோய் ஏற்பட்ட பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் சிலவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.
1 . சர்க்கரை நோய்:
மாரடைப்பு ஏற்பட்ட சர்க்கரை நோய் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான சர்க்கரை காரணமாக மாரடைப்பு ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
2 . உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு:
உயர் இரத்த அழுத்தம் மிகவும் மோசமான வியாதிகளில் ஒன்று. இரத்தத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான அழுத்தம் காரணமாக இதய நோய்கள் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்ட வழிவகுக்கிறது. அதேபோல் இரத்தத்தில் இருக்கும் அதிகமான கொழுப்பும் மாரடைப்பு ஏற்பட்ட முக்கிய காரணம்.
3 . புகைபிடித்தல்:
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு இருக்கும் பழக்கங்களில் ஒன்று புகை பிடித்தல். புகை பிடிக்கும் பழக்கத்தால் இதய நோய்கள் உட்பட உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.
4 . ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை:
ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் இதய நோய்கள் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும் மாரடைப்பு ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று.