மழைக்கு இதமாக உடனடி ரவா போண்டா.. உளுந்து ஊறவைக்க வேண்டாம்.. ஈஸியா செய்யலாம்.!



rava bonda preparation in tamil for rainy season

போண்டா செய்ய வேண்டும் என்றாலே உளுந்து ஊற வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவசியம் இல்லை. கீழே சொல்லப்படும் செய்முறையை பயன்படுத்தி கால் மணி நேரத்தில் சூப்பரான போண்டா செய்யலாம். 

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1/2 கப்,

ரவா - 1 கப்,

மைதா - 1/4 கப்,

சமையல் சோடா - 1/2 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு, 

பச்சை மிளகாய் - 3,

வெங்காயம் -2, 

இஞ்சி - சிறிதளவு, 

கறிவேப்பிலை : ஒரு கொத்து,

தயிர் - 1/2 கப்,

கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்,

தண்ணீர் - தேவையான அளவு, 

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

rava bonda

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா, ரவா மூன்றையும் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

இதையும் படிங்க: சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!

அதன்பின் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துண்டுகள், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை போன்றவற்றை அதில் போட்டு, பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கலக்கவும். 

இப்போது தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பசை போல நன்றாக கெட்டியாக போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் அதில் போண்டா கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான போண்டா ரெடி.!

இதையும் படிங்க: உலகம் எங்கே போனால் என்ன? நான் இருக்கேன்.. அம்மாவின் பாசம்.. நெகிழவைக்கும் வீடியோ.!