மருத்துவம் லைப் ஸ்டைல்

டாய்லெட்டில் தொலைபேசி உபயோகிக்கும் நபரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!

Summary:

Problems of using cell phone at toilet in tamil

ஐயோ இந்த வீட்டுல  பிரைவேசியே இல்லை  என்று புலம்பும்  நண்பர்கள்  பெரும்பாலும்  தனிமையாக  சிறிது நேரம் அமர்ந்து  போன் பயன்படுத்துவதும், ரிலாக்ஸ் மூட்ல செய்தித்தாள்களை டாய்லெட்டில் உட்கார்ந்து படிப்பதும் பழக்கமாக வைத்து உள்ளனர்.

நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் அதிகமாகவே உள்ளது. சரி அவ்வாறு கழிவறையில் தொலைபேசி உபயோகிப்பதும், செய்தித்தாள்கள் வாசிப்பதும் சரியா? அவ்வாறு செய்வதால் எண்ணலாம் வியாதிகள் வரும் தெரியுமா?

ரத்த நாளங்கள் பெரிதும் பாதிக்கும்

நீண்ட  நேரமாக டாய்லெட்டில் அமரும் போது  அழுத்தம் அதிகமாகி, ஆசன வாயை சுற்றி உள்ள ரத்த நாளத்தில் பெரிதும் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக 
ரத்தநாளங்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

கழிவறையில் நீண்டநேரம் தொலைபேசி பயன்படுத்தும் போது உங்கள் தொலைபேசியில் 18 மடங்கு கிருமிகள் அதிகரித்து காணப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் டாய்லெட்டில் அமர்ந்தவாறே போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பார்கள். இது போன்ற சமயத்தில், கிருமிகள நம் வாய் மற்றும் மூக்கு வழியாக உள் செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

அதிக நேரம் அழுத்தம் கொடுத்து பத்து நிமிடத்திற்கு மேல் அமரும் போது, மலக்குடல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது


Advertisement