தினமும் முட்டை, சிக்கன் சாப்பிடுபவர்களா நீங்கள்? பதறவைக்கும் தகவல்கள்!!

தினமும் முட்டை, சிக்கன் சாப்பிடுபவர்களா நீங்கள்? பதறவைக்கும் தகவல்கள்!!


Problems for chicken and egg

இன்று பிராய்லர்க்கோழியால் நன்மையும் தீமையும் எத்தனையோ செய்தியாக வெளிவந்தாலும் மக்கள் அதனை கண்டுகொள்வதில்லை.  40 நாட்களில் இறந்திடும் ப்ராய்லர் கோழி முழுக்க முழுக்க வேக்க்ஷன், கெமிக்கல்மிக்ஸ் மெடிசனால் வளர்பவை.

இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

chicken

ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மையை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர். 

தற்போது ஆடு, மாடு, கோழி, காடை என அனைத்தையும் சாப்பிட்டுவருகின்றனர். இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று அசைவம் சாப்பிட்டால் உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது.

இரண்டாவது  அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? என்று கேட்டால் உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி. 

அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள். அதிகமாக அசைவ விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. 

chicken
பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். 

குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டுக்கோழி முட்டைகளும், நாட்டுக்கோழி இறைச்சியும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது ஆகும்.