லைப் ஸ்டைல்

மின்சாரம் தாக்கி விட்டதா? உடனே என்ன செய்யவேண்டும் தெரியுமா? இதை படிங்க!

Summary:

Prevent from current shock tips in tamil

மின்சாரம் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு இன்று அணைத்து இடங்களிலும் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. வீட்டில் பல நேரங்களில் மின்சாரம் சம்மந்தமான பொருட்களை பயன்படுத்தும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது.

மின்சாரம் தாக்கும்போது எந்த அளவிற்கு நமது உடலில் மின்சாரம் பாய்கிறது, அதன் வோல்ட்டேஜ் போன்றவரை பொறுத்துதான் பாதிப்பின் அளவு அமைகிறது. அதேபோல குளியலறை, சமையல் அரை போன்ற ஈரமான இடங்களில் மின்சாரத்தின் திறன் அதிகமாக இருக்கும். இதுபோன்ற இடங்களில் மின்சாரம் தாக்கியவரை நாம் துரிதமாக செயல்பட்டால் உடனே காப்பாற்ற இயலும்.

1 . முதலில் மின்சாரம் தாக்கியவர்கள் மின் கம்பியை தொட்டுக்கொண்டிருந்தால் நாம் உடனே அவர்களை தொட்டு தூக்க கூடாது. அவ்வாறு தொடும் பட்சத்தில் மின்சாரம் நம்மையும் தாக்க கூடும். ரப்பர் உரையிலான கையுறைகளை அணிந்துகொண்டு அவர்களை மீட்கலாம், அல்லது மின்சாரத்தை துண்டித்துவிட்டு பாதிக்கப்பட்டவரை தூக்கலாம்.

2 . சாலைகளில் உயர் மின்னழுத்ததால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர் மின்சார கம்பியை தொடாமல் இருந்தாலும் நாம் அவரது அருகில் நெருங்குவது மிகவும் ஆபத்தானது. மின்சாரத்தை நிறுத்திவிட்டு அதன்பின்னரே நாம் அவர்கள் கிட்டே நெருங்கவேண்டும்.

3 . ஒருவர் மின்சாரம் தாக்கி பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தால் ஒருவேளை அவரது இதய துடிப்பு தடை பட்டிருக்கலாம். இதுபோன்ற சமயத்தில் பாதிக்கப்பட்டவரின் மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயத்தைச் செயல்படத் தூண்டலாம். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.


Advertisement