பித்தம், குமட்டலை குறைக்கும் ஆரஞ்சு தோல் துவையல்..! வீட்டிலேயே செய்வது எப்படி..!

பித்தம், குமட்டலை குறைக்கும் ஆரஞ்சு தோல் துவையல்..! வீட்டிலேயே செய்வது எப்படி..!



orange peel thuvaiyal recipe for health

உடல் உபாதைகள் வராமல் தடுக்கும் ஆரஞ்சு தோல் துவையல் எவ்வாறு சமைப்பது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.

ஆரஞ்சு தோலினை சாப்பிடுவதன் மூலமாக குமட்டல், பித்தம் போன்ற உடல் உபாதைகள் வராமல் தடுக்க இயலும். அத்துடன் உடலுக்கு பல வகையான சத்துகளையும் அளிக்கிறது.

தேவையான பொருட்கள் :

வெல்லம் - 1/2 கப்
புளிக்கரைசல் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
ஆரஞ்சு தோல் - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 3Orangeசெய்முறை : 

★முதலில் ஆரஞ்சு தோலை பொடி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

★பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய் வற்றலை போட்டு வறுக்க வேண்டும்.

★அடுத்து பொடியாக நறுக்கி வைத்த ஆரஞ்சு பழத்தோலை போட்டு நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்.

★இறுதியாக வதக்கியதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு, அதனுடன் துருவிய வெல்லம், புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து அரைத்தால் ஆரஞ்சு தோல் துவையல் தயாராகிவிடும்.

★இதனை நீண்ட நாள் குளிர்சாதன பெட்டியில் வைக்காமலேயே பயன்படுத்தலாம். அத்துடன் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அமிர்தத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கும்.