கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவி செய்யும் வரகரிசி.. வரகரிசி கேரட் சாதம் செய்வது எப்படி?.!



millet carrot rice for fat reduce

வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருப்பதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும், வரகரிசி தினமும் உண்பதன் மூலம் உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து, நீரிழிவு நோயானது கட்டுப்பாட்டுக்குள் வரும். இத்தகைய சத்துக்கள் நிறைந்த சுவையான வரகு அரிசி கேரட் சாதம் எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - 3
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு 
வெங்காயம் - 1
முந்திரி - தேவைக்கேற்ப
வரகு அரிசி சாதம் உதிரியாக வடித்தது - 1கப்

வரகரிசிசெய்முறை :

★முதலில் கேரட்டை தோல் நீக்கி சிறிது சிறிதாக துருவிக்கொள்ளவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

★அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

★பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், முன்பே துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.

★இறுதியாக அதில் உதிரியாக வடித்த வரகு அரிசி சாதத்தை சேர்த்து கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். வெந்த பின் தேவைக்கேற்ப சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறினால் ரெடியாகிவிடும்.