தினமும் குறட்டை தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்!அப்படியேனில் இரவு நேரத்தில் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீர்கள்! - TamilSpark
TamilSpark Logo
மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் குறட்டை தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்!அப்படியேனில் இரவு நேரத்தில் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீர்கள்!

ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று நல்ல தூக்கம். நாம் தூக்கு போது தான் அனைத்தையும் மறந்து நிம்மதியாக இருக்க முடியும். ஆனால் ஒரு சில சமயத்தில் ஒருவரது தூக்கம் மற்றவர் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்து விடுகிறது. காரணம் அவர் தூங்கும் போது விடும் குறட்டை அடுத்தவர் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது.

ஆனால் குறட்டை ஏற்படுவதற்கு பல்வேறு மருத்துவ காரணம் காணப்பட்டாலும் முக்கிய காரணம் நாம் இரவு நேரத்தில் உண்ணும் சில உணவு பொருட்கள் தான் குட்டையை ஏற்படுத்துகின்றன.

நாம் இரவு நேரத்தில் அதிகம் உட்கொள்ளும் கோதுமை மாவு கலந்த உணவு பொருட்களை உட்கொள்வதை தடுத்தல் வேண்டும்.

சர்க்கரை பானங்கள் குடிப்பது அல்லது இரவில் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவது உங்கள் சத்தமான குறட்டைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.பதப்படுத்தப்பட்ட சர்க்கரை தொண்டை திசுக்களை மோசமாக்கும் மற்றும் குறட்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அமைகிறது.

இரவு தூங்குவதற்கு முன் பால் குடிப்பது ஒரு சிலருக்கு பழக்கமாக இருக்கும். ஆனால் பால் பொருட்கள் உண்மையில் உங்கள் குறட்டையை அதிகரிக்கக்கூடும்.

 

குடிப்பழக்கம் நரம்புகளை தளர்த்த உதவுகிறது என்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் என்பதும் பொதுவாக நிலவும் கட்டுக்கதை ஆகும். உண்மையில் இது தசைகளை இழக்க வழிவகுக்கிறது. மேலும் குறட்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமைகிறது.


Advertisement
TamilSpark Logo