வெயிலுக்கு உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குலுக்கி சர்பத்.. தாகம் தனிய அற்புத பானம்.!

வெயிலுக்கு உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குலுக்கி சர்பத்.. தாகம் தனிய அற்புத பானம்.!



kulukki-sarbath-recipe-for-refreshing

பொதுவாக வெயிலுக்கு குளுமையாக இருப்பதற்காக பலவிதமான சர்பத்களை பருகியிருக்கலாம். அதுபோலதான் எலுமிச்சை சர்பத், நன்னாரி சர்பத் போன்றவற்றை பருகியிருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு தெரியாத குலுக்கி சர்பத் வீட்டிலேயே எவ்வாறு எளிய முறையில் செய்வது என்பதனை குறித்தது தான் இந்த செய்திக்குறிப்பு.

தேவையான பொருட்கள் :

புதினா இலை - 10 முதல் 15  
எலுமிச்சை பழம் - 2
பச்சை மிளகாய் - 2
சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி
சோடா - 1கப்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை
ஐஸ் கட்டி - தேவைக்கேற்ப

kulukki

செய்முறை :

★முதலில் சப்ஜா விதைகளை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

★பின் அதனுடன் நீளவாக்கில் இரண்டாக வெட்டிய பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.

★அடுத்து சிறு சிறு துண்டுகளாக எலுமிச்சம் பழங்களை வெட்டி வைக்க வேண்டும். உதாரணமாக ஒரு பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கலாம்.

★இதன் பின்னர் இவை அனைத்தையும் போட்டு கலக்குவதற்காக ஒரு மூடி போட்ட ஜாடியை தயாராக எடுத்து வைத்திருக்க வேண்டும். பின் அதில் வெட்டி வைத்த பச்சை மிளகாய், எலுமிச்சை துண்டுகள், புதினா, உப்பு மற்றும் சர்க்கரை போன்ற அனைத்தையும் போட்டு அதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவேண்டும்.

★கடைசியாக ஐஸ் கட்டிகளை தேவையான அளவு அதனுடன் ஜாடியில் சேர்த்து நன்றாக குலுக்க வேண்டும். அனைத்தும் முழுவதுமாக கலந்து, சர்க்கரை கரையும் வரை குலுக்கி பின் ஒரு கிளாஸில் அப்படியே ஊற்றி பருகினால் வெயிலுக்கு ஜில்லென குளுமையாய் இருக்கும்.