சமையலறை தந்திரம்: காலாவதியாகாத பொருட்களை பராமரிப்பது எப்படி?..!

சமையலறை தந்திரம்: காலாவதியாகாத பொருட்களை பராமரிப்பது எப்படி?..!


Kitchen Tips How to Safe Long Time Tamil

வீட்டில் உள்ள சமையல் பொருட்களில், பாக்கெட்டுகளில் வாங்கப்படும் பொருளில் காலாவதி தேதிகள் இருக்கும். சில சமையல் பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாது இருக்கும். நீண்ட ஆயுள் கொண்ட பொருட்களை சரியாக பராமரித்து வைப்பது அவசியம். 

தேன் : 

தேன் எளிதில் கெட்டுப்போகாது. தேனில் 17 % நீர் இருக்கும். இதில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்வதற்கு இடம் கொடுக்க கூடாது. பாட்டிலில் உள்ள தேனின் அடிப்பகுதி கெட்டியாக இருந்தால், சூடான நீரில் பாட்டிலை சிறிது நேரம் வைத்தால், அது இயல்பு நிலைக்கு வந்துவிடும். 

cooking tips

சர்க்கரை : 

நமது வீட்டில் சர்க்கரை தினமும் கட்டாயம் உபயோகப்படுத்தப்படும் பொருளில் ஒன்றாகும். சர்க்கரையை ஜாடியில் வைத்து ஈரம் இல்லாத ஸ்பூனை உபயோகம் செய்ய வேண்டும். ஈரப்பத்தில் இருந்து சர்க்கரையை தனிமைப்படுத்தி வைத்தால், அது கெட்டுப்போகாமல் இருக்கும். வெள்ளை சர்க்கரை மற்றும் பிரவுன் சர்க்கரையை காற்றுப்புகாத வகையில் வைக்க வேண்டும். சர்க்கரையுடன் ஈரப்பதம் கலந்தால் அது கட்டியாகும். 

உப்பு : 

சமையலில் தவிர்க்க இயலாதது உப்பு. இதனை தினமும் கட்டாயம் நாம் உபயோகித்துவிடுவோம். பிற உணவு பொருளை பாதுகாக்கவும் உப்பு உபயோகம் செய்யப்படுகிறது. தேனைப்போல உப்பும் பாக்டீரியாவை நீரிழப்பு செய்யும். இதனை சரியான முறையில் சேமித்து வைத்தால் பல வருடம் உப்பயோகம் செய்யலாம். அயோடைஸ்டு செய்யப்படும் உப்பு சில காலத்திற்குள்ளாகவே கெட்டுப்போகும் தன்மை கொண்டது. 

cooking tips

அரிசி :

காலாவதி ஆகாத பொருளில் வெள்ளை அரிசியும் ஒன்று. இதனை காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்க வேண்டும். அரிசியில் குறைந்த அளவு எண்ணெய் தன்மை உள்ளது. இது இயற்கையான முறையில் அரிசியை பாதுகாக்க உதவுகிறது. காற்று புகுதல், ஈரப்பதம் படிதல் போன்றவை இருந்தால் அரிசி விரைவில் காலாவதியாகிவிடும். 

சோயா சாஸ் : 

துரித உணவகத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுவது சோயா சாஸ். இது விரைவில் கெட்டுப்போகாது. இதனை அடிக்கடி திறந்து உபயோகம் செய்தால் எளிதில் கெட்டுப்போகும் தன்மையும் உண்டு. இதனை பிரிட்ஜில் சேமித்து வைப்பது நல்லது. சோயா சாஸில் இருக்கும் உப்பு, இயற்கையான பாதுகாவலனாக இருக்கும். 

cooking tips

வினிகர் : 

சமயலறையில் எளிதில் காலாவதியாகாத மூலப்பொருளாக வினிகர் உள்ளது. இது பல்வேறு உணவுகளை பாதுகாக்க உபயோகம் செய்யப்படுகிறது. இதன் அமிலத்தன்மை நீண்ட ஆயுள் கொண்டது. 

சோளமாவு : 

சோளமாவு எளிதில் கெட்டுப்போகாது. பல வருடங்கள் அது அப்படியே இருக்கும். எந்த சூழலிலும் ஈரப்பதத்தன்மை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ந்த இடத்திலும், வெப்பமான இடத்திலும் இதனை சேகரித்து வைக்கலாம். காற்று புகாத வகையில் உள்ள ஜாடியில் அதனை சேகரித்து வைக்கலாம்.