மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் சிறுநீரகம் மிக மோசமாக பாதிப்படைய முக்கியமான நான்கு காரணங்கள்!! கட்டாயம் தெரிஞ்சுக்கவேண்டிய தகவல்..

Summary:

நாம் செய்யும் சில மோசமான பழக்கவழங்களால் நமது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, முற்றிலும் செயலிழக

நாம் செய்யும் சில மோசமான பழக்கவழங்களால் நமது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, முற்றிலும் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

மாறிவரும் வாழ்க்கை முறையினால் உடல் மற்றும் உடலுறுப்பு சார்த்த பிரச்சனைகளும் அதிகரித்துவருகிறது. அதில் ஒன்றுதான் சிறுநீரக கோளாறு அல்லது சிறுநீரக செயலிழப்பு. நாம் செய்யும் சில தவறுகளால் நமது சிறுநீரகம் செயலிழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகிறது.

1 . அதிக இனிப்பு:

அதிக இனிப்பு பொருட்களை உட்கொள்வதால் அவை உங்கள் உடலில் சோடியம் மற்றும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, உங்கள் உடலில் இருக்கும் சோடியம் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது, இதன் காரணமாக சிறுநீரகங்களுக்கு வடிகட்டுவதில் சிக்கல் ஏற்பட்டு உங்கள் சிறுநீரகம் செயலிழக்க வழிவகுக்கிறது.

2 . அளவுக்கு அதிகமான உணவு மற்றும் அசைவம்:

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக நீங்கள் சாப்பிடும் காரணத்தாலும், அசைவ பொருட்கள் சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதாலும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

3 . மருந்து மாத்திரை:

மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்து உட்கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.  அதிக அளவு மருந்து மாத்திரை சாப்பிடுவதும் உங்கள் சிறுநீரகம் பாதிப்படைய வழிவகுக்கிறது.

4 . மது மற்றும் புகைபிடித்தல்:

சிறுநீரகம் பாதிப்படைய புகைபிடித்தல் மற்றும் அளவுக்கு அதிகமாக மது குடித்தால் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. சிகரெட் மற்றும் பீடியின் புகை உடலை அடையும் போது, ​​அது உடலில் உள்ள நச்சு கூறுகளை அதிகரிக்கத் தொடங்குகிறது. இதுபோன்ற நச்சுக்களை வட்டிக்காட்டும்போது சிறுநீரகம் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன, இதனால் மெதுவாக சிறுநீரகம் மோசமாகிறது, எனவே நீங்கள் புகைபிடித்தால் அந்த பழக்கத்தை இன்றே கைவிடுங்கள்.


Advertisement