90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
கென்யாவின் உலக சாதனை அங்கீகரிக்கப்படாது..! ICC திடீர் அறிவுப்பு.

ஒரு கால கட்டத்தில் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே டெஸ்ட் போட்டிகள் தான் மிகவும் பிரபலமாக இருந்தது.பிறகு காலப்போக்கில் 50 ஓவர் போட்டிகளை காண ரசிகர்கள் விரும்பினர்.தற்பொழுது குறுகிய காலம்,ஆட்டத்தில் விறு விறுப்பு ,விரைவு முடிவு காரணமாக அணைத்து ரசிகர்களும் டி-20 போட்டிகளையே கண்டுகளிக்கின்றனர்.
அதனால் ICC அவ்வப்போது டி-20 போட்டிகளையும்,2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை போட்டிகளையும் நடத்துகிறது.அதன் படி கடைசியாக 2016 ஆம் ஆண்டு
6 வது world cup t-20 தொடர் இந்தியாவில் நடைப்பெற்றது.
அடுத்து 2018 -தென்னாப்பிரிக்காவிலும் 2020ல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இதற்காக தகுதிச்சுற்று போட்டிகளை அதன் உறுப்பினர் அணிகளுக்கு ஐசிசி நடத்துகிறது. இந்நிலையில் ஒரு புதிய விதியை அறிவித்தது.
அதன்படி ஐசிசி.,யின் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையை 18ல் இருந்து 104-ஆகவும், தவிர, இந்த உறுப்பினர் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் டி-20 போட்டிகள், சர்வதேச போட்டிகளாக வரும் ஜனவரி 2019 முதல் அங்கீகரிக்கப்படும் எனவும் அறிவித்தது.
இந்நிலையில், ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையேயான ‘பி’ பிரிவு டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ருவாண்டா, கென்யா அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த கென்யா அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 270 ரன்கள் குவித்து புது உலக சாதனை படைத்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய ருவாண்டா அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 147 ரன்கள் எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கென்யா அணியின் இந்த உலக சாதனையை தற்போது ஐசிசி., அங்கீகரிக்க முடியாது. இதனால், கென்யா அணி வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.முன்னதாக கடந்த 2013ல் ஐபிஎல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்ததே இதுவரை சர்வதேச மற்றும் உள்ளூர் டி-20 அரங்கில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்களாகும்.
இந்த சாதனையை 2016ல் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சர்வதேச அளவில் சமன் (263-3) செய்தது.
ஐசிசி.,யின் புதிய விதியால், கென்யா அணி டி-20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை அங்கரீக்கப்படாமல் போனது. இதனால், கென்யா அணி வீரர்கள் சோகத்தில் உள்ளனர்.