ஆரஞ்சு பழத்தால் நமது உடலில் இத்தனை நன்மைகள் ஏற்படுகிறதா!

ஆரஞ்சு பழத்தால் நமது உடலில் இத்தனை நன்மைகள் ஏற்படுகிறதா!


if-you-eat-orange-daily-you-got-so-many-benefits

நாம் முன்னோர்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் பலவிதமான சத்துகள் நிறைந்து காணப்பட்டன. ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் கண்ட உணவுகளை உட்கொண்டு பலவிதமான நோயால் அவதிப்பட்டு வருகிறோம். இயற்கையாக விளையும் பழங்களை உட்கொள்வதால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது.

அதிலும் ஆரஞ்சு பழத்தை தினமும் உட்கொள்வதால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. 

Orange
1. இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக செயல்பட்டு புது இரத்தத்தை உற்பத்தி செய்கிறது.

2. முக்கியமாக வெயில் காலங்களில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாயிடு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.

3. செரிமான சக்தியை அதிகரிக்கவும்,பசியை அதிகப்படுத்துவதுடன் வெந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது.

4. கர்ப்பிணி பெண்கள் இப்பழச் சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

5. சிறு நீர் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.

6. சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதிகளில் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சுப் போன்ற பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம்.