லைப் ஸ்டைல் Corono+

கொரோனா வைரஸை நினைத்து ஒரே டென்ஷனா இருக்கா..? பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம்.?

Summary:

How to reduce stress during corono period in tamil

எங்கு பார்த்தாலும் கொரோனா, கொரோனானு ஒரே கொரோனா பீதியா இருக்கா? கொரோனா வைரஸ் பற்றி நினைத்தாலே டென்ஷன் ஆகுறீங்களா.? டென்ஷன விடுங்க. இதை படிங்க.

1 . குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்:
பொதுவாக குழந்தைகளுடன் நாம் இருக்கும்போது அணைத்து கவலைகளையும் மறந்து, நாமும் குழந்தையாக மாறிவிடுவோம் என பலர் கூறுவது வழக்கமான ஒன்றுதான். இதுபோன்ற சமயங்களில் உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுடன் பேசுங்கள், விளையாடுங்கள். அணைத்து கவலைகளும் மறந்துபோகும்.

2 . ஒன்றாக அமர்ந்து உரையாடுங்கள்:
எப்போதும் பள்ளி, கல்லூரி அல்லது வேலை என உட்காரகூட நேரம் இல்லாமல், அலைந்து திரிந்த உங்களுக்கு, உங்கள் குடும்பத்தாருடன் அமர்ந்து பேசுவதற்கும், அவர்களுடன் நேரம் செலவிடுவதற்கும் அருமையான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்துள்ள ஆசை, கோபம் இவற்றை மற்றவர்களுடன் பேசி ஒரு முடிவெடுங்கள்.

3 . அம்மா அல்லது மனைவிக்கு உதவி செய்யுங்கள்:
நீங்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அல்லது தினமும் வேலைக்கு செல்லும்போது, உங்களுக்கு சமையல் செய்து, உங்களை தயார் செய்து, உங்களுக்கு வேண்டியவற்றை செய்துகொடுத்துவிட்டு, பின்னர் துணி துவைப்பது, துணிகளை மடிப்பது இப்படி தினமும் உங்களுக்காக பல்வேறு சேவைகள் செய்யும் உங்கள் அம்மா அல்லது மனைவிக்கு இதுபோன்ற சமயங்களில் சற்று உதவியாக இருங்கள்.

4 . படம் அல்லது பாட்டு கேளுங்கள்:
சிலருக்கு படம் பார்ப்பது பிடிக்கும், சிலருக்கு பாட்டு கேட்பது பிடிக்கும். இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு பிடித்தமான படங்களை பாருங்கள். பிடித்தமான பாடல்களை கேளுங்கள். இவை உங்கள் மனதில் இருக்கும் கஷ்டங்களை நீக்கி, மனதை லேசாக்கும்.


Advertisement