தொப்பையை குறைத்து சிக்கென்று மாற இந்த வழியை பின்பற்றுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்..



How to reduce fat belly tips in tamil

வீட்டில் கிடைக்கும் சாதாரண பொருட்களை வைத்து தொப்பையை எப்படி குறைப்பது எனது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் இன்று பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது உடல் பருமன். அதிலும் குறிப்பாக தொப்பை என்பது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் நமது உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துவருகிறோம்.

இதற்காக நம்மில் பலரும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி  செய்து தொப்பை குறைக்க நேரத்தை வீண் செலவு செய்வதுண்டு. இப்படி பெரும்பாடுப்பட்டு தொப்பை குறைக்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிதாக தொப்பை எவ்வாறு கரைப்பது எப்படி என்று பார்ப்போம்.

health tips

தேவையான பொருட்கள்:


தேங்காய்ப்பால் – 2 கிளாஸ், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
துருவி இஞ்சி – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன்

செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு கிளாஸ் அளவு தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி,  இவற்றுடன் ஒரு டீஸ்ப்பூன் அளவுள்ள துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும். பின்னர் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்க்கவேண்டும்.

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி  குடிக்கும் பதத்திற்கு சூடாக்கிக்கொள்ளவும். சுவைக்காக இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள் பானை போல் இருக்கும் தொப்பை மாயமாகி விடும்.

இந்த பானம் செரிமானத்திற்கும் கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது. இது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவை சீராக்கும் இதனால் துரிதமாக உணவு செரிக்கப்படும். அதோடு இது சத்துக்கள் உறிந்து கொள்ளவும் துணை புரிகிறது.