வீட்டில் அடை மீந்துவிட்டதா?.. இந்த ரெசிபி செய்து அசத்துங்கள்..! நாவை நாட்டியமாட செய்யும் அருமையான உப்புமா..!! 

வீட்டில் அடை மீந்துவிட்டதா?.. இந்த ரெசிபி செய்து அசத்துங்கள்..! நாவை நாட்டியமாட செய்யும் அருமையான உப்புமா..!! 


How to Prepare Smart Adai Upma Tamil

பொதுவாக நமது வீட்டில் காலையில் அடை செய்து மீந்துவிட்டால் அதை அப்படியே கீழே கொட்டிவிடுவோம். ஆனால் மீந்த அடையை வைத்து சூப்பரான உப்புமா எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1 
அடை - 3 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
கடுகு - கால் தேக்கரண்டி 
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி 
புளி கரைசல் - ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் - இரண்டு தேக்கரண்டி 
கருவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

★முதலில் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

★பின் அடையை நன்றாக உதிர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

★ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

★வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், புளி கரைசல், உப்பு, உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

★கலவை உதிரியாக வந்ததும் தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான அடை உப்புமா தயாராகிவிடும்.