வீட்டிலேயே சுவையான சமோசா செய்வது எப்படி?.. இப்பவே தெரிஞ்சுக்கோங்க இல்லத்தரசிகளே..!

வீட்டிலேயே சுவையான சமோசா செய்வது எப்படி?.. இப்பவே தெரிஞ்சுக்கோங்க இல்லத்தரசிகளே..!



How to Prepare Samosa Home

நாம் என்னதான் வீட்டில் விதவிதமாக பல உணவுகளை செய்து சாப்பிட்டாலும், ஹோட்டல் தரத்திற்கு உள்ள சமோசாவுக்கு இன்று வரை வீட்டில் செய்யமுடிவதில்லை. அதை எப்படி செய்யலாம் என்பது குறித்து இன்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 200 கிராம் 
வெங்காயம் - இரண்டு உருளைக்கிழங்கு - 2 
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப எண்ணெய், உப்பு - தேவையான அளவு சீரகம் - ஒரு தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் எடுத்துக் கொண்ட மைதாமாவு, உப்பை சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடிவைத்துவிட வேண்டும்.

★பின்னர் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கி தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

★பின்னர் வானலியில் எண்ணெய்விட்டு சீரகம் போட்டு வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து தாளிக்க வேண்டும்.

★இறுதியாக மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவிட்டு இறக்கி வைக்க வேண்டும். 

★அதனை முக்கோண வடிவில், அரைவட்ட வடிவில் வெட்டி, கூம்பு போல் பிடித்து சூடாக உள்ள எண்ணெயில் மசாலா வைத்து எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.