குழந்தைகளுக்கு பிடித்த ரவா பூரி பாயசத்தை செய்வது எப்படி?..!

குழந்தைகளுக்கு பிடித்த ரவா பூரி பாயசத்தை செய்வது எப்படி?..!


How to Prepare Rava Poori Payasam Tami

சுவையாக குழந்தைகளுக்கு விருப்பமான ரெசிபியாக இருக்கும் ரவா பூரி பாயசத்தை தயார் செய்வது எப்படி என இன்று காணலாம். 

ரவா பூரி பாயசம் செய்யத் தேவையான பொருட்கள் :

பால் - 2 கிண்ணம்,
சர்க்கரை - தேவையான அளவு,
கண்டன்ஸ்ட் மில்க் - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
ரவை - கால் கிண்ணம்,
மைதா மாவு - 1 கரண்டி,
உப்பு - சிறிதளவு,
நெய் - 1 கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு.

cooking tips

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட ரவையுடன் மைதா, நெய், தண்ணீர் மற்றும் உப்பு போன்றவற்றை கெட்டியாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை அரைமணிநேரம் ஊறவைத்து, மீண்டும் பிசைந்து பூரியாக தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். 

இதன்பின்னர், பூரியை சிறுசிறு துண்டாக நறுக்கி, பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி, அதனுடன் கண்டன்ஸ்ட் மிளகை சேர்த்து, சர்க்கரை போட்டு கால்மணிநேரம் கிளற வேண்டும். இவை தயாரானதும் பூரி துண்டு, ஏலக்காய் தூள் சேர்த்து குடிக்கலாம். 

சுவையான ரவா பூரி பாயாசம் தயார்.