உடலுக்கு நன்மையளிக்கும் பருப்பு உருண்டை ரசம்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!

உடலுக்கு நன்மையளிக்கும் பருப்பு உருண்டை ரசம்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!


How to Prepare Parupu Urundai Rasam

உடலுக்கு நன்மையளிக்கும் பருப்பு உருண்டை ரசம் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

தேவையான பொருட்கள் :

பருப்பு உருண்டை செய்வதற்கு :
 
ஊற வைத்த துவரம் பருப்பு - 3/4 கப் பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
காய்ந்த மிளகாய் - 3

ரசம் வைப்பதற்கு :

கருவேப்பிலை - 1 கொத்து 
சீரகம் - 1/2 தேக்கரண்டி 
நெய் - 3 தேக்கரண்டி 
தண்ணீர் - 1 கப் 
தக்காளி - 1 
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி தனியாத்தூள் - 2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
கொத்தமல்லி - சிறிதளவு 
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை :

★முந்தைய நாள் இரவே துவரம்பருப்பை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

★அடுத்து மிக்ஸியில் பருப்பு உருண்டைக்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

★பின் இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பு உருண்டைகளாக உருட்டி வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

★அடுத்து கொத்தமல்லி மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

★ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, சீரகம், காய்ந்த மிளகாய் தூள் மற்றும் தாளித்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

★தக்காளி வதங்கிய பின் புளித்தண்ணீர் சேர்த்து மஞ்சள், தனியா, சீரகம், மிளகுத்தூள், உப்பு போன்றவற்றை 2½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

★ரசம் கொதிக்க தொடங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி மூடி வைத்து பின் பரிமாறினால் சூப்பரான பருப்பு உருண்டை ரசம் தயாராகிவிடும்.