உடல் எடையை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கம்பு தோசை.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!!

உடல் எடையை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கம்பு தோசை.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!!


How to Prepare Kambu Dosa In Tamil

உடல் எடையை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கம்பு தோசை எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் கம்பு நார்ச்சத்து மிக்க உணவு மட்டுமல்லாமல், கொழுப்பும் குறைவாக இருக்கும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 400 கிராம் 
வெந்தயம் - 2 தேக்கரண்டி 
கம்பு - 400 கிராம் 
உளுத்தம் பருப்பு - 200 கிராம் 
கல் உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

★முதலில் காய்ந்த கம்பினை அலசி சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

★கம்பு ஊறவைத்த இரண்டு மணி நேரம் கழித்து, இட்லி அரிசியையும் கழுவி கம்புடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

★பின் வெந்தயம், உளுத்தம் பருப்பு இரண்டையும் நன்றாக அலசி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

★தொடர்ந்து கம்பி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்த தண்ணீரை பயன்படுத்தி, கிரைண்டரில் அரிசி மற்றும் கம்பை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

★ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கம்பு மற்றும் அரிசிமாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

★பின் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை தோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

★அடுத்து இரண்டு மாவையும் ஒரு சேர கலந்து 5 முதல் 6 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.

★இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தோசை மாவுகளாக ஊற்றி பொன்னிறமாக வந்ததும் எடுத்தால் கம்பு தோசை தயாராகிவிடும்.