குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த முட்டை சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?.. வீட்டியிலேயே 5 நிமிடத்தில் செய்து அசத்துங்கள்..!!



how to prepare healthy egg chappathi role

வீட்டிலேயே விரைவில் செய்யக்கூடிய முட்டை சப்பாத்தி ரோல் எப்படி செய்வது என்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி - ஆறு 
பெரிய வெங்காயம் - 3 
பச்சை மிளகாய் - ஒன்று 
கருவேப்பிலை - சிறிதளவு 
எண்ணெய் - 3 தேக்கரண்டி 
முட்டை - ஒன்று 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

★முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

★ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

★பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றி இரண்டு நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவேண்டும்.

★அடுத்து செய்துவைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை சிறிது வைத்து சுருட்டினால் முட்டை ரோல் தயாராகிவிடும். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.