உடலுக்கு சத்தான செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே அசத்துங்கள்.!

உடலுக்கு சத்தான செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே அசத்துங்கள்.!


how-to-prepare-ellu-urundai-tamil

ஒரு டம்ளர் பாலில் உள்ள கால்சியம் சத்து, சிறிதளவு எள்ளில் கிடைக்கிறது. பால் பருக இயலவில்லை என நினைப்பவர்கள் அதற்கு பதிலாக ஒரே ஒரு எள்ளுருண்டை மட்டும் சாப்பிடுங்கள் தேவையான அளவு கால்சியம் சத்து கிடைக்கும். சுவையான எள்ளு லட்டு எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி தற்போது காண்போம்.

தேவையான பொருட்கள்:

நெய் -2 ஸ்பூன்
பொடியாக்கிய ஏலக்காய்-1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - அரை கிலோ 
வெள்ளை எள் - 1 கிலோ

Tips

செய்முறை:

கெட்டியான பாத்திரத்தில் வெள்ளை எள்ளை போட்டு வறுத்து எடுக்க வேண்டும். பொன்னிறமாக எள் மாறும் வரை இடைவிடாது வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வறுக்கும்பொழுது ஒரு போதும் எள் கருகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக வறுத்த பின் எள்ளை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல வெல்லத்தையும் நன்றாக அரைத்து தூளாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் சிறு தீயில் வைக்க வேண்டும். இதன் பின் நெய் ஊற்றி அது சூடாகிய பிறகு வெல்லத்தை கொட்டி ஏலக்காய் சேர்க்க வேண்டும். வெல்லம் பாகு பதத்திற்கு வந்ததும் அதனை இறக்கிடலாம்.

பின் எப்பொழுதும் லட்டுகளை தயாரிப்பது போல உருட்டி அதனை காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து 10 நாட்கள் வரை வைத்து சுவையாக உண்ணலாம்.