வீட்டில் சப்பாத்தி மீந்துவிட்டதா?.. கவலைய விடுங்க.. அருமையான சுவையில் அட்டகாசமான சாண்ட்விச் செய்து அசத்தலாம் வாங்க..! 

வீட்டில் சப்பாத்தி மீந்துவிட்டதா?.. கவலைய விடுங்க.. அருமையான சுவையில் அட்டகாசமான சாண்ட்விச் செய்து அசத்தலாம் வாங்க..! 


How to prepare chappathi sandwich

பொதுவாக வீட்டில் சப்பாத்தி, இட்லி போன்றவை மீந்துவிட்டால் அதனை தூக்கி கீழே கொட்டிவிடுவீர்கள். ஆனால் தற்போது மீந்த சப்பாத்தியை வைத்து சாண்ட்விச் எப்படி செய்வது என தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி - 4 

முட்டைக்கோஸ் - 50 கிராம் 

சோளம் - 1/4 கப் 

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

மயோனைஸ் - 2 தேக்கரண்டி

வெண்ணெய் - 4 தேக்கரண்டி

வெங்காயம் - 1 

எண்ணெய் - 1 தேக்கரண்டி

குடமிளகாய் - 1 

சீஸ் - 4 துண்டுகள் 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் முட்டைக்கோஸ், குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகாய் மற்றும் சோளம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

★அதனுடன் கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்க வேண்டும்.

★இறுதியாக முட்டைக்கோஸ் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும்.

★அடுத்து இந்த காய்கறி கலவையில் தக்காளி சாஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து கலக்க வேண்டும்.

★பின் சப்பாத்தியை விருப்பப்படி வெட்டி அதில் காய்கறி கலவையை நிரப்ப வேண்டும். அதன் மீது சீஸ் சேர்த்து சப்பாத்தி பாதியாக மடிக்கவும்.

★ஒரு தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து, செய்து வைத்த சப்பாத்தி சாண்ட்விச்களை அடுப்பில் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை சமைத்து பரிமாறினால் சப்பாத்தி சாண்ட்விச் தயாராகிவிடும்.