உடலுக்கு நன்மை தரும் காலிப்ளவர் முட்டைபொடிமாஸ் செய்வது எப்படி?..!

உடலுக்கு நன்மை தரும் காலிப்ளவர் முட்டைபொடிமாஸ் செய்வது எப்படி?..!


How to Prepare Cauliflower Egg Podimass Tamil

காலிப்ளவரில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவி செய்கிறது. மாதத்திற்கு ஒருமுறையில் இருந்து இரண்டு முறை காலிப்ளவர் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இன்று காலிப்ளவர் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என காணலாம். 

தேவையான பொருட்கள்:

காலிப்ளவர் - 1 பூ,
முட்டை - 2,
மிளகாய் தூள் - 2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
இஞ்சி பூண்டு விழுது - தேவைக்கேற்ப (அம்மியில் அரைத்தால் நலம்). 

Cauliflower Egg

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு,
பெருஞ்சீரகம் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு. 

செய்முறை:

எடுத்துக்கொண்ட காலிபிளவரை சிறிதாக நறுக்கி, சூடான நீரில் 5 நிமிடம் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க தேவையான பொருட்களை ஒன்றன் பின்னர் ஒன்றாக சேர்த்து, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

Cauliflower Egg

இவை நன்கு வதங்கியதும் காலிபிளவரை சேர்ந்து வதக்க வேண்டும். காலிப்ளவர் நன்கு வதங்கிய பதத்திற்கு வந்ததும், மிளகாய்பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி, முட்டை உதிரி பதத்திற்கு வரும் வேளையில், அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினாள் சுவையான, இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் காலிப்ளவர் முட்டை பொடிமாஸ் தயார்.

குறிப்பு: மசாலாக்கள் தேர்வுக்கேற்ப நிறம் மற்றும் சுவை மாறுபடும்.