"இந்த குணங்கள் இருந்தால் அவர் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருப்பாராம்!"



How to control over emotions

நம்மில் பெரும்பாலானவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கிறோம். எளிதில் கோபம் கொள்ளுதல், அழுதல் ஆகிய குணங்களே உணர்ச்சி வசப்படுதல் என்கிறோம். ஒருவர் எளிதில் கோபப்பட்டாலோ, அழுதாலோ அவரை பலவீனமானவர் என்கிறோம்.

Emotions

ஆனால் உண்மையில் இந்த கருத்துக்கள் தவறானவை. உண்மையில் நாம் எப்போது எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியமல்ல. நம் உணர்ச்சி வலிமை என்பது ஒரு சவாலை நாம் எப்படி எதிர்கொண்டு கடந்து வருகிறோம் என்பதில் தான் இருக்கிறது.

உணர்ச்சி ரீதியாக வலிமையானவர்கள் அவர்களது தேவைகள் குறித்து நிலையாகவும், அதை வெளிப்படுத்தவும் செய்வார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் ஒரு தோல்வியை சந்தித்தாலோ அல்லது ஏமாற்றம் அடைந்தாலோ மனம் தளராமல் எல்லாவற்றைநியும் மறந்து முன்னேறுவார்கள்.

Emotions

மேலும் இப்படிப்பட்ட மனிதர்கள் எளிதில் மற்றவர்களுடன் ஒத்துப்போவார்கள். அனுசரித்து போக கூடியவர்கள். எளிதில் தங்களை மாற்றிக்கொள்வார்கள். மேலும் இவர்கள் நெருக்கடியின் மீது கவனம் செலுத்தாமல் அதை சமாளிப்பதில் தான் கவனம் செலுத்துவார்கள்.