மருத்துவம் லைப் ஸ்டைல்

சாப்பிட்ட உடன் வயிறு இப்படி பலூன் போல் ஊதிவிடுகிறதா.? அப்போ இதையெல்லாம் சாப்பிடாதீங்க...!

Summary:

Health tips to stop acidity details in Tamil

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இன்று நம்மில் பலர் செய்யும் தவர்கள் பலவித உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முறையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளால் பலவிதமான நோய்கள் நம்மை தொற்றிக்கொள்கிறது. அதில் ஒன்றுதான் இந்த வயிறு உப்புசம்.

சிலருக்கு வயிறு மிக மெல்லியதாக, தட்டை போன்று இருந்தாலும் சாப்பிட உடனே வயிறு பலூன் போல் பெரிதாகிவிடும். இதனால் பலநேரங்களில் அசௌகரியமான சூழல் ஏற்படுகிறது. இதுபோன்று வயிறு உப்புவதற்கு ஒருகாரணம் வயிற்றுப்பகுதியில் இருக்கும் அமிலம் உணவுக்குழாய் வழியாக உயர்வதுதான்.

இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு, ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை, திராட்சை, மிளகாய்ப்பொடி, கடுகு போன்றவற்றை தவிர்த்தல் நல்லது காரமான உணவுகள் எரிச்சலை ஏற்படுத்தி செரிமானத்தில் கோளாறு ஏற்படுத்தும்.

மேலும், இந்த பிரச்னையினால் எதுக்களித்தல் அடிக்கடி நிகழும். தக்காளி கொண்டு செய்யப்படும் பாஸ்தா, தக்காளி சூப், ஜூஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதேநேரம், பர்கர், பீட்சா போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.


Advertisement