மருத்துவம் லைப் ஸ்டைல்

அயோ குள்ளமா இருக்கோமேன்னு கவலையா? கவலைய விடுங்க. இத ட்ரை பண்ணுங்க!

Summary:

Health tips to increase height in tamil

ஐயோ குள்ளமா இருக்கோமேன்னு கவலையா இருக்க? கவலைய விடுங்க. இந்த உடற்பயிற்சிகளை செய்தால்  உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உடற்பயிற்சிகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க.

நீச்சல்

உங்கள் உயரத்தை அதிகரிக்க நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் அவசியம். நீச்சல் அடிக்கும் போது உங்கள் உடல் பாகங்கள் விரியும். அவ்வாறு விரியும் போது உங்கள் உயரம் அதிகமாகும். இந்த பயிற்சியை தினமும் செய்வது அவசியம்.

தொங்குவது

இது பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்றுதான். நீங்கள் எதையாவது பிடித்து தொங்கும் போது உங்கள் உடல் நேராகும், மேலும் உங்கள் உடல் விரிந்து நீங்கள் உயரமாவதற்கு வழிவகுக்கின்றது.

இடுப்பை உயர்த்துதல்

கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.

ஸ்கிப்பிங்

உயரம் அதிகரிக்க ஸ்கிப்பிங் ஒரு சிறந்த பயிற்சி. தொடச்சியாக நீங்கள் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உங்கள் உயரம் அதிகரிக்க வாய்ப்புண்கள் அதிகம் உள்ளது.

கால்களை மேல் உயர்த்துதல்

நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.


Advertisement