மாதவிடாயின் போது ஏற்படுகின்ற பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரே ஒரு மருந்தை சாப்பிட்டால் போது‌...



Health tips for calcium benefits

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். குழந்தைப்பருவம் என்பதே அவர்களுக்கு விரைவில் மறைந்து விடுகிறது. இவ்வாறு சீக்கிரத்தில் பூப்பெய்துவதால் அவர்களின் உடல் மிகவும் வலுவிழந்து விடுகிறது. அவர்களுக்கு உண்டாகும் பிரச்சனையும் விரைவாகவே துவங்கிவிடுகிறது. ஒரு சிலருக்கு ஹீமோகுளோபின் பிரச்சனை, இடுப்புவலி, மூட்டுவலி, கர்ப்பப்பை பிரச்சனை போன்ற அனைத்தும் வந்துவிடுகிறது.

மாதம் தோறும் மாதவிடாயின் பொழுது சரியான உதிரப்போக்கு இல்லாமல் இருக்கும் அல்லது அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். இவற்றைத்தவிர உடல் வலி, உடல் சோர்வு போன்ற அனைத்தும் இருந்து கொண்டிருக்கும். இவை அனைத்தையும் சரி செய்ய தேவையற்ற மருத்துவ முறைகளை பின்பற்றுவதை விட நாம் உண்ணும் உணவின் மூலமே சரிசெய்து கொள்ளலாம். அதற்கு இந்த 3 பொருட்கள் வைத்து செய்யும் இந்த சத்து மாவு உருண்டையை ஒரு மாதத்திற்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டால் போதும். எந்த வித பிரச்சனையாக இருந்தாலும் அவை அனைத்தும் சரியாகிவிடும்.

health tips

கருப்பு உளுந்து – 2 கப், பொட்டுக்கடலை – அரை கப், கருப்பட்டி – ஒரு கப், நல்லெண்ணெய் – முக்கால் கப்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். உளுத்தம் பருப்பை நல்ல வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு இதனுடன் அரை கப் பொட்டுக்கடலை சேர்த்து அதனையும் வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி நன்றாக ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் முக்கால் கப் கருப்பட்டி சேர்த்து, இவற்றை பொடியாக அரைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் கருப்பட்டிக்கு பதிலாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை இவற்றை சேர்த்து விடக்கூடாது.

அதன் பிறகு ஒரு கடாயில் முக்கால் கப் நல்லெண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.நல்லெண்ணெய் கை பொறுக்கும் சூடு வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். முக்கால் கப் நல்லெண்ணெய் முழுவதுமாக சேர்த்து கலந்து விட்ட பிறகு, கையை பயன்படுத்தி கிளறிவிட்டு, உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த உருண்டைகளை மாதத்திற்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டா போதும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.