லைப் ஸ்டைல்

காலை உணவை தவிற்பவரா நீங்கள்? இதை கொஞ்சம் படிச்சு பாருங்க உங்களுக்கே பயம் வரும்!

Summary:

Health issues if not take morning time food

வளர்ந்துவரும் நாகரிக உலகில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் இருக்கும் நபர்களை நாம் பார்த்துக்கொடுத்தான் இருக்கிறோம். கிடைத்த உணவை வாயில் போட்டுகொண்டு அவசர வாரமாக வேலைக்கு செல்லும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பொதுவாக தவிர்க்கப்படுவது காலை உணவுதான்.

அந்தவகையில் காலை உணவினை தவிர்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். காலை உணவு நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஓன்று. காலை நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதனால் குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவை தவிர்க்கின்றனர். இதனால் மாலை உணவை அதிகம் சாப்பிடுவதால் அதன்மூலம் கலோரிகள் அதிகரித்து உடல் எதையும் அதிகரிக்கக்கூடும். நம்மை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ள டோபமைன் (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) என்னும் இரண்டு கார்மோன்கள் தேவை படுகிறது.

காலை உணவை தவிர்ப்பதால் இந்த இரண்டு கார்மோன்கள் சுரப்பது குறைந்து அடுத்தவர்களிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. மேலும் மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும்.

இரவு தொடங்கி அடுத்தநாள் மதியம் வரை சாப்பிடாமல் இருப்பதனால் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றம் தடைபட்டு பல்வேறு நோய்கள் உருவாக்க காரணமாகிறது. எனவே காலை உணவை காட்டாயம் தவிர்க்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.


Advertisement