மருத்துவம் லைப் ஸ்டைல்

அடேங்கப்பா! சாதாரண கருப்பட்டியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இதெல்லாம் தெரியமால் போச்சே!

Summary:

Health benefits of karuppatti in tamil

இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு சத்தான உணவுகளில் ஓன்று இந்த கருப்பட்டி. இதில் பல்வேறு சத்துக்கள் நிரம்பி உள்ளது. இந்த கருப்பட்டியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. மேலும், உடலில் உள்ள ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்க கருப்பட்டி உதவுகிறது. இந்த ஹீமோகுளோபின் குறைபாட்டால்தான் இரத்த சோகை உருவாகிறது.

எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில்
சேர்த்து வருவது நல்லது. வயது வந்த பெண்களுக்கு கருப்பட்டியையும்,
உளுந்தையும் சேர்த்து கஞ்சி போல் செய்துகொடுத்தல் இடுப்பு வலு பெறுவதோடு கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் கருப்பட்டியில் அதிகம் உள்ளது. எனவே டீ அல்லது காபியில் கருப்பட்டியை சேர்த்து குடிப்பதன் மூலம் கலோரிகள் இல்லாமல் நமது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இதை செய்து பார்க்கலாம்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சாப்பாட்டிற்கு பிறகு சிறு கருப்பட்டி துண்டை சாப்பிட்டால் செரிமானம் சீராகும். கருப்பட்டியில் உள்ள அசிட்டிக் அமிலமாக மாறி,
வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில்
செரிமானமாகச் செய்யும்.


Advertisement