தன் தோழிக்காக ஆணாக மாறிய பெண்; ஆனால் திருமணத்திற்கு பின் நடந்த சுவாரசியம்!

தன் தோழிக்காக ஆணாக மாறிய பெண்; ஆனால் திருமணத்திற்கு பின் நடந்த சுவாரசியம்!


girl changed to boy for her girl friend

ஹரியானாவில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் தன்னுடைய தோழியின் மீது கொண்ட காதலால், அவரை திருமணம் செய்துகொள்ள அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் செய்துள்ளனர். ஆனால் இப்பொழுது அந்த பெண் தோழி அந்த ஆணுடன் குடும்பம் நடத்த விருப்பமில்லை என விலகிச் சென்று உள்ளார்.

ஹரியானாவில் பெண்ணாக பிறந்து, பின்பு தனது தோழியின் மீது கொண்ட காதலால் அந்தப் பெண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் தன் பெற்றோர்களிடம் சென்று சம்மதம் வாங்கி வருவதாக சென்ற மனைவி மீண்டும் கணவனை சந்திக்க திரும்பவில்லை. இதனால் மனமுடைந்த கணவன் தன்னுடைய மனைவியை மீட்டுத்தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆணாக மாறிய அந்த பெண் அளித்த புகாரில் அந்த இரண்டு பெண்களும் பள்ளியில் ஒன்றாக பிடித்ததாகவும் அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே நெருக்கமாக பழகியதாகவும் தெரிகிறது. திருமண வயது நிரம்பிய பின்பும் இருவருக்கும் பிரிந்து செல்ல மனமில்லை. எனவே அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். இதற்கு அவர்களில் ஒருவர் ஆணாக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இதனைத் தொடர்ந்து அவர்களில் ஒரு பெண் கடந்த வருடம் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார்.

haryana

ஆணாக மாறிய பெண்ணின் வீட்டார்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 10 லட்சம் கடன் வாங்கி அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்ததும் ஆணாக மாறிய அந்த நபருக்கும் அவருடைய தோழிக்கும் கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது அந்த பெண்ணின் வீட்டாருக்கு தெரியாது. இதனைத் தொடர்ந்து அந்த பெண் தன்னுடைய வீட்டிற்கு சென்று அவர்களது திருமணத்தை பற்றி பெற்றோரிடம் எடுத்துக்கூறி அவர்களின் சம்மதத்தை பெற்று வருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி தன் பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு சென்ற மனைவி மீண்டும் தன்னுடைய கணவரை சந்திக்க வரவே இல்லை.

தன் மனைவி திரும்பி வராததால் சந்தேகமடைந்த கணவர் ஹரியானா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பின்னர் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் தனக்கு தன்னுடைய கணவருடன் வாழ விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். மேலும் நான் ஒரு மேஜர் என்றும் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவு எனக்கு உள்ளது எனவே என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கணவன் வீட்டார் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவரை வலுக்கட்டாயமாக மிரட்டி இவ்வாறு பேச வைத்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்கள் இருவரையும் இணைத்தே தீருவோம் என கணவன் வீட்டார் தெரிவித்துள்ளனர். தன் தோழிக்காக ஆணாக மாறிய பெண்ணுக்கு நேர்ந்த இந்த பரிதாபம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.