மருத்துவம் லைப் ஸ்டைல் 18 Plus

பெண்களின் காம உணர்வுகளை அதிகரிக்க உதவும் அற்புதமான ஐந்து உணவு வகைகள்!

Summary:

Foods for increasing girls mind for relationship

உடலுறவு என்பது மிகவும் அன்பான, ஆரோக்கியமான ஒரு செயல். அதை முழுமையாக கடைபிடிக்கும் ஆணும் பெண்ணும் இறுதிவரை அன்புடன் வாழ்கின்றனர்.

பொதுவாக ஆண்கள் எளிதில் உடலுறவுக்கு தயாராகிவிடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு நிறைய கால அவகாசம் தேவை படுகிறது. பொதுவாக ஆணும், பெண்ணும் சம அளவில் ஈடுபாட்டுடன் உடலுறவில் ஈடுபட்டால்தான் முழுமையான இன்பத்தை அடைய முடியும்.

சில பெண்களுக்கு ஆசை இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்சனையால் இதில் முழு அளவில் ஈடுபாடு காட்ட முடியாமல் இருக்கும். அது போன்ற பெண்களுக்கு கீழ் வரும் உணவுகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.

1. மீன்:

உங்கள் உடல் சுறுசுறுப்பை தூண்டுவது தான் மீன் கொழுப்பில் இருக்கும் ஒமேகா 3 எஸ் ஆகும். மேலும் இது மூளையில் காணப்படும் டோபைன் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் உடலுறவு உணர்ச்சிகள் மனதில் தோன்ற வாய்ப்பிருக்கிறது.

2. முட்டை:

முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி6 பெண்களின் மூளையை தூண்டிவிட்டு அவர்களுக்கு காம உணர்வுகளை அதிகரிக்க செய்கிறது.  

3. சாக்லேட்:

பொதுவாக சாக்லேட் உண்பதால் உடலுறவு எண்ணம் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கு காரணம் இதில் உள்ள மெக்னீசியம்தான். குறிப்பாக கருப்பு சாக்லேட்டில் உள்ள பினைல் எத்திலைமின் உடலுறவு எண்ணத்தை தூண்டுகிறது. எனவே மேல உள்ள எதையும் நீங்கள் விரும்பாவிட்டாலும் இந்த முறை உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

4. ஓட்மீல்:

காலை உணவு உண்பதால் நமது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கிறது. இதனால் செக்ஸ் ஆர்வமும் அதிகரிக்கும். குறிப்பாக ஓட்ஸில் எல்-ஆர்க்கினின் எனும் சக்தி காணபடுகிறது. இது உங்களுக்கு அதிக உடலுறவு ஆர்வத்தை குடுக்கும்.

5. குழி பேரி பழம்:

இந்த உணர்வுப்பூர்வமான பழத்தில் அதிகம் வைட்டமின் சி இருக்க, இதனால் பெண்களின் காம உணர்வு அதிகரிக்கிறது. உங்கள் உடம்பில் ஓடும் இரத்த ஓட்டத்தை சீராக்க, இதனால் உடலுறவில் ஒரு வேகமும் காணக்கூடும்.

ஒரு பெண்ணின் உடலுறவுக்கான விருப்பம் குறைவாக இருப்பது உடல் நிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒன்றே என்பதை உணர்ந்து தேவையற்ற மருந்துகளை தவிர்த்து, இது போன்ற இயற்கையான பழங்கள், காய்கறிகள், இனிப்புகளை மருத்துவரின் பரிந்துரையுடன் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லதாக கணவன் – மனைவி இருவருக்கும் அமைவதோடு, பிறக்க போகும் குழந்தைக்கும் நன்மையை தரக்கூடும்