சென்னையில் இருந்து யாரு வந்தாலும் ஊருக்குள்ள விடாதீங்க..! குடும்பத்தை காப்பாற்ற சென்னை போன மக்களுக்கு இப்படி ஒரு சோதனையா..? வைரல் வீடியோ..!
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் இருந்து யார் வந்தாலும் ஊருக்குள் அனுமதிக்க கூடாது என தண்டோரா போட்டு எச்சரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 க்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனாவின் பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம், ஊரடங்கு போன்ற காரணங்களால் சென்னையில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கடலூர் அருகே உள்ள கிராமப்பகுதியில் நிர்வாக ஊழியர் ஒருவர் தண்டோரா அடித்து ஊர் மக்களை எச்சரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில், சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து வருபவர்களை யாரும் அனுமதிக்க கூடாது எனவும், மீறி அனுமதித்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், இது கலெக்டர் உத்தரவு என கூறப்பட்டுள்ளது.
குடும்பத்தை காப்பாத்துவதற்காக சென்னைக்கு பிழைப்பு தேடி சென்றவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா என பலரும் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துவருகின்றனர்.
சென்னைக்காரன ஊருக்குள்ள விடாதீங்க..! தண்டோரா போட்டு எச்சரிக்கும் கிராமங்கள்..! pic.twitter.com/47aNQg4BEL
— TamilSpark (@TamilSparkNews) June 20, 2020