காற்றில் பறக்கிறதா கொரோனா வைரஸ்.? காற்றின் மூலமும் கொரோனா பரவும் என கூறும் விஞானிகள்.! திடீரென வெளியான அதிர்ச்சி தகவல்.!

காற்றில் பறக்கிறதா கொரோனா வைரஸ்.? காற்றின் மூலமும் கொரோனா பரவும் என கூறும் விஞானிகள்.! திடீரென வெளியான அதிர்ச்சி தகவல்.!



Does corono spread from air latest research

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு காற்றின் மூலமும் பிரவுவதாக பல நாடுகளை சேர்ந்த 200கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பலலட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது. கொடூரமான இந்த கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாதநிலையில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை மக்களுக்கு உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

corono

கொரோனா நோயாளி இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது அவர்களிடம் இருந்து அருகில் இருக்கும் மற்றவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுகிறது. இந்நிலையில் 32 நாடுகளில் 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார மையத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், கொரோனா வைரஸ் காற்றில் பரவும் சிறிய நீர்த்துளிகள் மூலம் பறந்துசென்று மற்றவரை பாதிக்க கூடும் என அறிவுறுதித்துள்ளனர்.

இதனால் கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என அறிவிக்குமாறு உலக சுகாதர மையத்திற்கு அந்த கடிதத்தில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், வைரஸ் காற்றில் பறந்ததற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.