தலை தனி, உடல் தனியாக வெட்டப்பட்ட பிறகும் பழிவாங்கிய பாம்பின் தலை.! வைரல் வீடியோ காட்சி.!

தலை தனி, உடல் தனியாக வெட்டப்பட்ட பிறகும் பழிவாங்கிய பாம்பின் தலை.! வைரல் வீடியோ காட்சி.!


copperhead-bites-itself-video-goes-viral

பாம்பு ஒன்று தலை தனியாக, உடல் தனியாக துண்டான பிறகும் பாம்பின் தலை வேறொரு பொருள் என நினைத்து தனது உடலையே தாக்கும் வீடியோ காட்சி பார்ப்போரை அச்சமடைய வைக்கிறது.

பொதுவாக பாம்பின் தலை துண்டான பிறகும் அதற்கு உயிர் இருக்கும் என பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். சில வருடங்களுக்கு  முன்னர் கூட சீனாவை சேர்ந்த சமையல்காரர் ஒருவர் பாம்பினை சமைப்பதற்காக தலை தனி, உடல் தனியாக வெட்டியபோது குப்பை தொட்டியில் கிடந்த பாம்பின் தலை அவரை சீண்டி அவர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் வைரலானது.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த வீடியோ காட்சியில் மிகப்பெரிய பாம்பு ஒன்று தலை தனி, உடல் தனியாக வெட்டப்பட்டு கிடக்கும் நிலையில் அதன் உடல் மட்டும் துடித்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதன் வால் பகுதி மட்டும் அங்கும் இங்குமாக சுற்றிவருகிறது.

ஆனால் பாம்பின் தலை சிறிதுநேரம் எந்தவிதமான அசைவும் இன்றி முற்றிலும் உயிரிழந்ததுபோல் காணப்படுகிறது. ஆனால் சிறிது நேரத்தில் பாம்பின் வால் அதன் வெட்டப்பட்ட தலை அருகே வரும்போது வேறொரு பொருள் தன்னிடம் வருவதாக உணர்ந்த பாம்பின் தலை தனது உடலையே கவ்வி பிடிக்கிறது. இந்த காட்சியை நீங்களே பாருங்கள்.