உங்கள் குழந்தை அதிகம் விரல் சப்புகிறதா? இதோ உங்களுக்கான ஒரு எளிய டிப்ஸ்!

உங்கள் குழந்தை அதிகம் விரல் சப்புகிறதா? இதோ உங்களுக்கான ஒரு எளிய டிப்ஸ்!



child-feding

உங்கள் குழந்தை கருவிலிருக்கும்போதே விரல் சப்ப ஆரம்பித்து விடுகின்றன. இது அவர்கள் பிறந்த பின்னும் தொடரும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் குழந்தை பயப்படும்போதோ, பசி வரும்போதோ, அல்லது தூக்கம் வரும்போதோ முதலில் செய்வது இதுவாக தான் இருக்கும். சிறு வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் இருக்கும். அப்படி செய்யும் போது அவர்களை தடுக்காதீர்கள், அது அவர்களுக்கு நன்மை பயப்பதாகும்.  

விரல் சப்பும் பழக்கம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களை இந்த பழக்கத்தை நிறுத்தச்சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அதை அதிகம் செய்ய தொடங்குவார்கள். எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அவர்களை கட்டாயப்படுத்துவது அவர்களை சிறு வயதிலியே அதிகம் கோபப்படுபவர்களாக மாற்றிவிடும்.

child

அவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் வாயில் விரல் வைக்கும் நேரத்தை கவனித்துக் கொண்டு அந்த சமயத்தில் அவர்களை திசை திருப்புங்கள்.குழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சித்தால் நான்கு வயதிற்கு முன்னதாகவே  நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

பற்கள் நிலையாக வளர தொடங்கியபின் விரல் சப்புவது அவர்களின் பல் அமைப்பையே சிதைத்துவிடும். 4 வயதுக்கு முன்னரே இந்த பழக்கத்தில் இருந்து விடுபட அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.