கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி.?
குழந்தைகள் பொதுவாக சிக்கன், நூடுல்ஸ் இவைகள் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். அவை இரண்டையும் சேர்த்து சற்று வித்தியாசமாக எளிமையான முறையில் சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பிச்சு போட்ட சிக்கன் -250 வெங்காயம் -4
துருவிய கேரட் - 1 கப்
வெங்காயத்தாள் - 1 கப்
வேகவைத்த நூடுல்ஸ் -250
முட்டைக்கோசு - 1 கப்
குடை மிளகாய் - 1 கப்
தேவையான அளவு - உப்பு
இஞ்சி, பூண்டு விழுது- 1 1/2
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
சோள மாவு - 3 தேக்கரண்டி
லைட் சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் சாஸ் - 1 தேக்கரண்டி
முட்டை -1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்க வேண்டும். அவற்றுடன் 1 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், வேகவைத்த சிக்கனை உதிர்த்துவிட்டு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் அடுத்ததாக சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து அனைத்தையும் 2 நிமிடங்கள் நன்கு கிளறிவிட வேண்டும்.
பின் முட்டைக்கோஸ், துருவிய கேரட், கேப்சிகம் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும். கட்லட்டின் சுவையை அதிகரிக்க ஸ்பிரிங் ஆனியனைச் சேர்க்க வேண்டும். காய்கறிகள் நன்கு வதங்கிய பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸ், 2-3 டீஸ்பூன் சோள மாவு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து விட வேண்டும். பின்பு உங்களுக்குப் பிடித்த வடிவில் வட்டமாகவோ நீளமாகவோ கட்லெட்டை தட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடாய் அல்லது தவாவில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் எண்ணெயில் கட்லட்டை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வேகவிட்டு பொரித்தெடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் தயார்.