வீட்டிலேயே சுவையான சீஸ் பிரெட் சாண்ட்விச் ஈசியா செய்வது எப்படி!!ஹெல்த்தி டிப்ஸ்..



Cheese bread sandwich recipe

தற்போது கொரோனா காலம் என்பதால் ஓட்டலுக்கு சென்று சாப்பிட சிலர் தயங்குகின்றனர்.அப்படி உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே சுவையாக, ஈசியாக சீஸ் பிரெட் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 
பிரெட் - 2
முட்டை - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் பொடி - சிறிதளவு
மிளகுப் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சீஸ் -1

ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும். பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அதனையடுத்து அந்த கலவையில் சீஸ் துருவி அதையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

Cheese

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து ஆம்லெட்டாக தவாவில் ஊற்றி பெப்பர் தூவி வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின் அதே தவாவில் பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் வாட்டி எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.

தற்போது மீண்டும் தவாவில் வைத்து பிரட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும். அவ்வளவுதான் சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.