தினமும் சப்பாத்தி சாப்பிட்டு போர் அடிக்குதா?.. பெரியவர்கள் முதல் அனைவருக்கும் பிடித்த சப்பாத்தி ரோல்..!!

தினமும் சப்பாத்தி சாப்பிட்டு போர் அடிக்குதா?.. பெரியவர்கள் முதல் அனைவருக்கும் பிடித்த சப்பாத்தி ரோல்..!!



chappathi roll recipe

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சப்பாத்தி ரோல் எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1 
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி 
சப்பாத்தி - 5 
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

செய்முறை :

★ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

★வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

★பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.

★அடுத்து சப்பாத்திகளின் நடுவே இந்த வதக்கிய கலவையை வைத்து ரோல் செய்ய வேண்டும்.

★இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சுருட்டிய சப்பாத்திகளை இருபுறமும் டோஸ்ட் செய்து, பரிமாறினால் சப்பாத்தி ரோல் தயாராகிவிடும்.