லைப் ஸ்டைல்

பதட்டத்தில் மணப்பெண்ணின் அம்மா பார்த்த வேலை..! அதுக்குன்னு இப்படியா..! மொத்த பேரும் சிரிச்சிட்டாங்க.. வைரல் வீடியோ..

Summary:

பதட்டத்தில் பெற்ற மகளின் காலில் விழுந்து ஆசி வாங்கிய தாயின் கலகலப்பான வீடியோ காட்சி இணைய

பதட்டத்தில் பெற்ற மகளின் காலில் விழுந்து ஆசி வாங்கிய தாயின் கலகலப்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்று. என்னதான் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தாலும், திருமணம் நடந்துமுடியும் வரை மணமக்களின் வீட்டார் சற்று பதட்டத்துடன்தான் இருப்பார்கள். அதிலும் பெண் வீட்டார் பற்றி சொல்லவே தேவை இல்லை.

பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும்வரை உச்சகட்ட பதட்டத்தில் மூழ்கி விடுகின்றனர் பெண்ணின் குடும்பத்தினர். அப்படி பதட்டத்தில் மணப்பெண்ணின் தாயார் செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட வீடியோ காட்சியில், திருமணத்திற்கு முன்பு அர்ச்சகர் மணப்பெண்ணிடம் தேங்காய் ஆகியவற்றை கொடுத்து, பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு கூறுகிறார். ஆனால் மகளின் திருமண பதட்டத்தில் இருந்த பெண்ணின் அம்மாவோ, தன்னைத்தான் அர்ச்சகர் சொல்வதாக நினைத்துக்கொண்டு தன் மகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

இதனை சற்றும் எதிர்பாராத மணமகள் அதிர்ச்சியில் சற்று விலகி நிற்கிறார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் கலகலப்பாகியுள்ளது.


Advertisement