உடலை சுத்தப்படுத்தும் அற்புதமான இயற்கை மூலிகைகள்.!
நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும் அற்புத மூலிகைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவை கலந்த திரிபலா சூரணம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சிறந்த மருந்தாகும். திப்பிலியை பொடியாக அரைத்து தேனீரில் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள ரத்தம் முழுவதும் சுத்தம் மடையும்.
அதேபோல் முருங்கைக் கீரையை பொடியாக அரைத்து அதில் சூப் செய்தோ அல்லது உணவில் சேர்த்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் சுத்தமாகும். ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தா ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
மேலும் வாய்ப்புண் மற்றும் வாயில் உருவாகும் கிருமிகளை அழிக்க தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாய் சுத்தமாகும்.