"உடலை பிட்டாக்கும் கருப்புத் தண்ணீர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?!"

"உடலை பிட்டாக்கும் கருப்புத் தண்ணீர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?!"


Black water for body fitness

அல்கலைன் நீர் எனப்படும் தண்ணீர் தான் கருப்பு நீர் எனறழைக்கப்படுகிறது. இந்த நீரை கிரிக்கெட் வீரர் விராட் கோலி உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்களும், நடிகர்களும் தினமும் குடித்து நல்ல கட்டுமஸ்தான உடலைப் பேணி வருகின்றனர். இதன் விலை லிட்டருக்கு 4000ரூ ஆகும்.

Healthy

சாதாரண நீரைப் போன்றே பாட்டிலில் விற்கப்படும் இந்த நீரில் காரத்தன்மை அதிகம் உள்ளது. இதைக் குடிப்பதால் உடல் இருமடங்கு அதிக நீரேற்றத்துடன் இருக்கும். மேலும் சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயாளிகளின் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.

மேலும் இந்த அல்கலைன் நீரில் உள்ள கனிமச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள அதிகப்படியான அமில அளவைக் குறைக்கிறது. உடலில் அமிலத்தின் அளவு அதிகமாகி விட்டால், அது விரைவில் எலும்புகளை முறியச்செய்யும்.

Healthy

எனவே எலும்புகளைக் காக்க இந்த காரத்தன்மை அதிகமுள்ள அல்கலைன் நீரைக் குடிப்பது நல்லது. மேலும் இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வருபவர்கள் இந்த அல்கலைன் நீரைக் குடித்து வந்தால் மிகவும் நன்மை பயக்கும்.