லைப் ஸ்டைல்

இதுவரை இப்படித்தான் குளிக்கிறீர்களா? அது மிகவும் தவறு! எப்படி சரியான முறையில் குளிப்பது?

Summary:

Best to ways to take good bath in tamil

ஒருமனிதன் ஒரு காரியத்த சிறப்பாக செய்யவேண்டும் என்றால் அவன் மனதளவிலும், உடல் அளவிலும் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். 
நமது உடலை புத்துணர்வு அடைய செய்ய ஆண்டவன் நமக்கு குடுத்த முறைதான் குளியல். ஒருமனிதன் குளிக்கவில்லை என்றால் அவன் உடளவில் பலவிதமான நோய்களை சந்திக்கின்றான்.

சரி எப்படி சரியான முறையில் குளிப்பது என்பது பற்றி பாப்போம். குளிக்கும் முறையில் கூட ஒரு சில முறைகள் உள்ளது.. ஒரு சிலர் காக்கா குளியல் போட்டு உடனே வெளியில் வந்து விடுவார்கள். அது மிகவும் தவறு. குளியல் என்பது குளிர்வித்தல் என்று அர்த்தம்.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் நமது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? உடலில் அதிகமாக உள்ள வெப்பத்தை குளியல் மூலம் எப்படி வெளியேற்ற முடியும் என்பதை பார்க்கலாம் வாங்க.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக்கழிவுகள் அதிகமாக தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிப்பது மிகவும் நன்று.

பொதுவாகவே வெந்நீரில் குளிக்க கூடாது. ஆனால் குளிர் காலத்தில் வெந்நீரில் குளிப்பது நன்று.

குளிக்கும் முறை :

குளியல் அறைக்குள் சென்றதும் நீரை எடுத்து அப்படியே உச்சந்தலையில் ஊற்றுவதுதான் வழக்கம். ஆனால் அது மிகவும் தவறு. முதலில் நீரை காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக 
நமது உடம்பிலிருந்து வெளியேறும்.

அதனால் தான் நம் முன்னோர்கள், குளத்தில் இறங்கும் போது ஒவ்வொரு படியாக இறங்குவது வழக்கம். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இதேபோன்று உச்சதலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காக சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு பின்பு குளத்தினுள் இறங்குவார்கள்.

இதேபோன்று குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு அமர்ந்திருப்பதும் மிக நல்லது. அதே போன்று சூரிய உதயத்திற்கு முன்பு குளிப்பதும் மிகவம் நன்று. அதுவே குளிப்பதற்கு சரியான நேரமும் கூட.

இனியாவது எந்த நேரத்தில் எப்படி குளிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு குளிப்பது நன்று.


Advertisement