தமிழகம் லைப் ஸ்டைல்

ஆங்கிலத்தில் பேசி வெளுத்து வாங்கும் பிச்சை எடுக்கும் பாட்டி..! விழிபிதுங்கி நின்ற தமிழ் இளைஞர்..! வைரல் வீடியோ..!

Summary:

Beggar grandma speaking good English video goes viral

இந்த உலகில் யாரையும் சாதாரணமாக நினைத்துவிட கூடாது என்பதற்கு சான்று இந்த வீடியோ. பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் என்றால் படிக்காதவர்கள், எழுத்தறிவு இல்லாதவர்கள் என்றுதான் எல்லோரும் நினைத்திருப்போம்.

ஆனால், பிச்சை எடுக்கும் பாட்டி ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. குறித்த காட்சியில் சிவா என்ற இளைஞர் ஒருவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது எதார்த்தமாக கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அப்போது பிச்சை எடுக்க வந்த பாட்டி ஒருவர் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்த அந்த இளைஞர் அவரிடம் கேள்விகள் எழுப்ப, தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசி அசத்துகிறார் அந்த பாட்டி. மேலும், தன்னால் உனக்கும் சொல்லித்தரமுடியும் என கூறும் அந்த பாட்டி, தான் கான்வென்டில் படித்ததாகவும் கூறுகிறார். அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள்.


Advertisement