யார்கிட்ட மோதுற..! யானையை துரத்தி சென்ற குட்டி நீர் எருமை..! செம வைரல் வீடியோ.!

யார்கிட்ட மோதுற..! யானையை துரத்தி சென்ற குட்டி நீர் எருமை..! செம வைரல் வீடியோ.!


baby-buffalo-attacks-elephant-video-goes-viral

மிகப்பெரிய யானை ஒன்றை குட்டி நீர் எருமை ஓன்று கோவமாக துரத்திக்கொண்டு ஓடும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

17 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், யானையின் கால் அளவு கூட இல்லாத குட்டி நீர் எருமை ஓன்று யானையை கோவமாக துரத்துகிறது. குட்டி நீர் எருமை தன்னை துரத்துவதை கண்டு, அந்த குட்டிக்கு ஒன்றும் ஆகாத வகையில், யானை மிகவும் கவனமுடன் பின்னோக்கி ஓடுகிறது.

ஐயோ.! யானை மிதித்துவிட்டால் நம்ம குட்டி சட்னி ஆகிவிடும் என்ற பயத்தில், குட்டி நீர் எருமைக்கு பின்னால் அதன் தாய் நீர் எருமையும் ஓடுகிறது. இறுதியில் யானை அந்த நீர் எருமையிடம் இருந்து விலகி தனது பாதையில் நடந்து செல்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.