உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பாப்ரி பியோல் சர்பத்.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி?..!

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பாப்ரி பியோல் சர்பத்.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி?..!


babri-beol-cooldrink-recipe

உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் பாப்ரி பியோல் வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்தது தான் இந்த செய்திக்குறிப்பு.

ஜம்மு-காஷ்மீரில் அனைவராலும் கோடை நாட்களில் விரும்பி குடிக்கக் கூடிய ஒன்றுதான் பாப்ரி பியோல். இது வட்டார மொழியில் "கான் சர்பத்" என்றும் அழைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - சுவைக்கேற்ப
நறுக்கிய பாதாம், பிஸ்தா - 25 கிராம்
துளசி அல்லது சப்ஜா விதை - 25 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 சிட்டிகை
காய்ச்சிய பால் - 50 மி.லிbabri beolசெய்முறை :

★முதலில் சப்ஜா அல்லது துளசி விதைகளை ஒரு கப் தண்ணீரில் 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

★பின் ஒரு கிண்ணத்தில் பாலை கொதிக்க வைத்து, அதனுடன் சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, ஆறியதும் ஊறவைத்த விதைகளை சேர்க்க வேண்டும்.

★அடுத்து சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

★பின் துருவிய தேங்காய், பாதாம், பிஸ்தா, மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து 5 முதல் 6 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிட்டால் வெயிலுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.